வன்னிகாடுகளில்… துலங்காத மர்மங்கள்…
Saturday, 7 February 2009
என்ன அண்னை…... வன்னிக்கை பயங்கரமா சண்டை நடக்காம்… ஒரு செய்தியையும் கானம்?
ஓமடா தம்பி.. இஞ்சை யாழ்ப்பாணத்திலை மட்டுமில்லை…. சிங்கள தேசத்திலையும் மறைக்கினமடா…
என்ன மோனை சொல்லுறாய்…??
உன்னானை குஞ்சியப்பர்…. உங்க சண்டையிலை கானக்க ஆமியள் செத்து போட்டாங்களாம்… ஆனா சொந்தகாரருக்கு இன்னும் சொல்லலை எண்டா பாருங்கோவன்… ஆமிக்காரன்ரை சொந்தகார ரெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்த போயினமாம்…
பின்னை முரளி அண்ணை உண்மையை எத்தினை காலம் எண்டுதான் பொத்திவைக்கிறது….. ஒரு நாளைக்கு கிளப்பிக்கொண்டுதானே வரும்…
மெய்தானடா தம்பி…. இடத்தினை பிடிக்கிறதை மட்டுமே மாஞ்சு மஞ்சு சொல்லீனம்… தங்கடை இழப்பை சொன்னதாகானம்.. ஆனாட கொஞ்சம் கானமாத்தான் இழப்பு வந்திருக்கும் போலை…
பின்னை அண்ணை அந்த ஆத்திரத்திலை தான் சனங்களுக்கு அடிக்கிறாங்க….
கடைசிலை நடந்த ஊடருப்புக்கு….. எங்கடை அண்னை ஆக்களை விட அக்காக்கள் தானாம் முண்ணுக்கு நிண்டவையாம்….??????
ஓமட தம்பி இன்ரநெற்ரிலை படம் எல்லாம் போட்டு கிடக்காம்…. இங்க போப்பரிலை ஒண்டும் போடுறாங்களில்லை….
''இஞ்சருங்கோ…… அடுப்பிலை உலை வைச்சிருக்கன் ஒருக்கா பாருங்கோ…. செல்லாச்சி வீட்டை போட்டுவாறன்” வேலிக்கு அங்காலை இருந்து….. சந்தியக்காவின் குரல்…
இருங்கோடா பொடி உலையை பாதுட்டு வந்துடுறன்…. பேந்து உவளோடை காலம் தள்ளேலாது…”
முரளி அண்ண பொடிநடையாய் போகிறார்
Posted byமுச்சந்திமுரளி at 07:28 5 comments
Labels: அரசியல், அனுபவங்கள், ஈழம், கதையள்