‘பெண்’சேகரா வும் முரளியன்ணையும்
Sunday, 18 January 2009
என்ன முரளியன்ணை அண்னையாக்கள் கிளிநெச்சியையும் விட்டுட்டு போட்ட்டாங்கள் கவலைபடாமை பேப்பர் படிச்சுக் கொண்டு இருக்கிறியள்?
ஓமடா தம்பி, பொடியள் கிளிநெச்சியையும் விட்டுட்டாங்கள் தான் மனசுக்கு கொஞ்சம் சங்கடமாதான் இருக்கு… எனக்கும் ஒண்டுமா விளங்கேலையடா…
உங்கைய் ஆளுக்கு ஆள் ஒவ்வொரு ஆய்யு கட்டுரை அளவுக்கு கதைக்கினம்…
கதைக்கிறவங்கள் கதைப்பங்களடா….. இப்ப பாரன் உதுக்களை எங்கையேன் பொடியள் பிரிச்சுக்கொண்டு வர தெரியும் சங்கதி..
ஆனா அண்ணை றாயக்ஸா… புலியளை அழிச்சாச்சு தெண்டெல்லே சொலுறார்…
சந்திரிக்கா சொல்லாத என்னத்தை புதுசா சொல்லிடார் உவர்…. இந்த சந்திலை இருந்து பேப்பறை படிக்கிற நாங்களே இவ்வளவு யோசிச்சா.. தலைவர் எவ்வளாத்தை யோசிப்பர் ஆ
சிங்களதேசம் எல்லாம் பட்டாசேல்லே கொழுத்தினம்
நல்லா கொழுத்தட்டும்…. சும்மா விட்டுட்டு போன இடத்தை பிடிச்சதுக்கே உந்த கொக்கரிப்பு எண்டால்.. அடிச்சு புடிச்சிருந்தா செவ்வாக்கிரகத்திலை தான் கொண்டாடி யிருப்பினம்
‘பெண்’சேகரா தான்தானம் அடிச்சு புடிச்சதாம்..
என்னத்தை புடிச்சவர்…. இடத்தை புடிச்சா சரியே கொஞ்சம் எண்டாலும் இழப்பையல்லே குடுத்திருக்ககோனும்… அவங்கள் விட்டுட்டு போய் ஐஞ்சாறு மனத்தியாளத்தாளை புடிச்சு போட்டு கதைகினம்…
றோட்டுக்கங்களை இருந்து…. மாஸ்ரர் வீட்டு கடைகுட்டியின் குரல்..
‘முரளியணோய்… சந்தியக்கா வரட்டாம் கறிவைக்க வெங்காயம் வெட்டணுமாம்….’
இரடா பொடி வந்துர்றன்…. குஞ்சுயப்பர் வாருவர் இப்ப வந்துர்றன்
முரளியண்ணை வீட்டை நோக்கி பொடிநடையாய் போகிறார்
Posted byமுச்சந்திமுரளி at 15:17 6 comments
Labels: அரசியல், ஈழம், கதையள், சந்தியில்
முச்சந்திமுரளியணை…..
மூண்டு றோட்டுகள் சந்திக்கும் முச்சந்தியில்…..முன்னால் இருக்கும் அம்மங்கோயிலும்… வடக்காலை இருக்கும் பள்ளிகூடமும்…… பிரபல்யமில்லை.
அறுவது வருச பழைய ஆலமரத்தின்ரை குழுமையில் பன்ங்குத்திலை இருந்து அரசியல் பேசுற முச்சந்தி முரளியன்னை தான் பிரபல்லாம் .
விடியகாத்தாலை வந்தாகூடி கொடுப்புக்கை பல்லுத்தீட்ட ஒரு பிரசும், அட்டனை கால் போட்ட படி பனக்குத்திலை இருந்து….. பேப்பர் படிச்சுகொண்டுதானிருப்பார் மு.மு.
ஊர்பழசிலை இருந்து…. இப்ப வயசுக்கு வந்த போடியள் வரை அத்தினை பேரும் முரளியண்ணையின்ரை பரம விசிறியள்…….
பின்நேரங்களிலை ரியூசனுகள் முடியிற நேரமா… பேண்டுகளை பாக்க காத்திருக்கும் விடலை போடியளும்… கட்டேலை போற பெரிசுகளும் .. என முரளியண்ணனின் ஆலமரத்தடி சபா களைகட்டும்.
முரளியண்ணையை கட்டினாபிறகு சாந்தியக்கா சந்தியக்கா ஆகிட்டா…. எண்டா பாருங்கோவன்….
சந்திலை நடாக்கிற….. சங்கதியளை சொல்லுவம் எண்டு இருக்கன்…….
Posted byமுச்சந்திமுரளி at 14:49 3 comments
Labels: வலைபூ
வலைப்பூவின் வாசகன் வலைப்பதிவாளனாக...
Sunday, 11 January 2009
வலைப்பூ வாசகனாக இருந்த நான் பதவியுயர்வு? பெற்று வலைப்பதிவாளனாக வந்திருக்கிறேன்..... எதை எழுதுவது என்றுதான் புரியவில்லை....
01.பார்பவை 02.கேட்பவை 03.அறிந்தவை என் எழுதலாம் எண்டு இருக்கிறன் பார்க்கலாம்........
Posted byமுச்சந்திமுரளி at 10:48 2 comments
Labels: அனுபவங்கள், வலைபூ